Posts

Showing posts from July, 2020

திரிகோண ஆசனம்

Image
திரிகோண ஆசனம் :                          இந்த ஆசனம் முக்கோண தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது .   செய்முறை :                         முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும் . பின் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்தி நிற்க வேண்டும் .  மெல்ல காற்றை உள்ளுக்கிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும் . இப்போது இழுத்த மூச்சை மெல்ல வெளியே விட்டுக் கொண்டே கைகளை நீட்டிய நிலையில் அப்படியே வைத்துக் கொண்டு உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும் .  உடலை இடது பக்கமாக வளைக்கும்போது முழங்காலை யோ , உடலின் மற்ற பாகங்களையோ வளைக்கக் கூடாது . இடுப்பை மட்டும் வளைக்க வேண்டும். நீட்டிய இடது கையின் நுனிவிரலால் இடது பாதத்தைத் தொட வேண்டும் இந்த நிலையிலேயே சில விநாடிகள் இருக்க அந்தச் சமயம் மூச்சுக் காற்றை உள்ளுக்குள் இழுக் கக் கூடாது . அச்சமயம் முகத்தை மேல்பக்கம் திருப்பி வலது கைவிரல் நுனியைப் பார்க்க வேண்டும் . இப்போது நீட்டிய நிலையில் உள்ள வலதுகை வானத்தை நோக்கி நிற்கும் . அண்ணாந்து பார்க்கும்போது முகவாய்க் கட்டை வல

விபரீதகரணி ஆசனம்

Image
விபரீதகரணி ஆசனம் : விபரீதகரணி ஆசனத்தில் கால் மட்டும் செங்குத்தாகவும் உடல் பகுதி சாய்வாகவும் வைத்து பயிற்சியை மேற் கொள் கிறோம் . சர்வாங்க ஆசனத்தில் உடல் முழுவதும் தலைகீழ் நிலையில் நிறுத்தப்பட்டு பயிற்சியை மேற் கொள்கிறோம் .  செய்முறை :                            முதவில் விரிப்பின் மீது சர்வாங்காசனப் பயிற்சியைப் போன்று மல்லாந்து படுத்துக் கொண்டு , மூச்சை உள்ளுக்கு இழுத்து அடக்கியபடி நீட்டிய கால்களை ஒன்றாகச் சேர்த்து மேலே தூக்க வேண்டும் .  கால்களை மேலே தூக்கும்போது அச்சமயம் இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு தாங்கிக் கொண்டு மேலே கால்களை செங்குத்தாக நிறுத்த வேண்டும் . அப்போது உடலின் பாரம் முழுவதும் பின் கழுத்து . நெஞ்சின் மேல் பின்புறப் பகுதி ஆகியவற்றில் மட்டும் தாங்கியிருக்க வேண்டும் . பின்பு தோள் , வயிறு , நெஞ்சு ஆகியப் பகுதிகளை ஒரே நேர்கோட்டில் அதாவது இடுப்பிலிருந்து சுமார் 45 அளவு படத்திலுள்ளது போன்று சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும் . அப்போது நன்கு மூச்சை வெளியே விட்டும் உள்ளுக்குள் இழுத்தும் விட்டு விட்டு இப்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.  நேர அளவு :   

மச்சாசனம்

Image
மச்சாசனம் : மச்சாசனம் என்பது மீன் உருவமன்று , செயல் வடிவில் மீன் போன்றதாகும் . தண்ணீரில் உள்ள மீன்கள் நம் உடலி லுள்ள சிரங்கு போன்ற புண்களை கொத்தித் தின்னும் அதனால் புண்ணிலுள்ள கிருமிகள் ஒழிந்து விடுகிறது . அது போன்று இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரலிலுள்ள விஷக் கிருமிகள் அழிக்கப்பட்டு நமக்கு ஆரோக்கியத்தை அளிப் பதால் இதற்கு மச்சாசனம் என்று கூறப்படுகிறது .  செய்முறை :                           யோகாசனப் பயிற்சிக்காகப் போடப்பட்ட விரிப்பின் மீது அமர்ந்து பத்மாசனம் போட்டுக் கொள்ள வேண்டும்.  முதலில் நிமிர்ந்து உட்கார்ந்து வலது காலை மடித்து இடது தொடையின் மீதும் , இடது காலை மடித்து வலது தொடை யின் மீதும் போட்டு கொண்டு கால்களைப் பிரிக்காமல் பின்பக்கமாகச் சாய்ந்து இரு கைகளையும் பின்பக்கமாக உயர்த்தியபடி வளைத்து தரையில் வேண்டும் . ஊ ன்றும்படி செய்யவேண்டும்.  பிறகு மெதுவாக கழுத்தைப் பின்பக்கமாக வளைத்து தலை யை தரையில் படும்படி வைத்து இடுப்பையும் மார்பையும் மேல் நோக்கி வில்லைப் போன்று வளைக்க வேண்டும் .  இப்போது பத்மாசனம் போட்டபடி இருந்த கால் தொடை கள் இரண்டும் தரையில் படும்படி இருக்க வேண்டும் .

தனுராசனம்

Image
தனுராசனம்:                        தனுராசனம் என்பது வில் போன்ற இருக்கையெனப் பொ ருள்படும் . வில் போன்று தோற்றம் அளிப்பதால் இப்பெயர் .  செய்முறை :                        சலபாசனம் செய்து முடிந்ததும் , அதே நிலையில் குப்புறப் படுத்து கொண்டபடியே கால்கள் இரண்டையும் முதுகின் பக்கமாக வளைக்கவும் . இரு கைகளினாலும் வளைத்த கால்களைக் கணுக்காலுக்கருகில் பிடித்துக் கொள்ளவும் . படத்தில் காட்டியவாறு நன்கு கவனித்து சுவாசத்தை வெளியே விட்டுக் கொண்டே முதலில் கால்களைச் சேர்த்த வாறே உயரத் தூக்கவும் . பின்பு தலையையும் கழுத்தையும் முடிந்த வரைக்கும் பின்னால் இழுத்து வளைக்கவும் .  நேர அளவு :                       மூன்று முதல் ஐந்து வினாடி வரை நிறுத்தவும் . இவ்வாறு இரண்டு மூன்று முறைகள் செய்யவும் .  பலன்கள் :                       வயிற்று உறுப்புகளை வலுப்படுத்துகிறது . தொப்பையை குறைக்கிறது . கூன் முதுகை சரி செய்கிறது . முட்டி வலிகள் குணமடைகின்றன . நழுவிய முதுகுத் தண்டு , ஆஸ்துமா , நீரிழிவு நோய் சரி செய்யப்படுகிறது . வயிறு , இடுப்புப் பகுதி யில் உள்ள கொழுப்பை நீக்குகிறது . மாதவிலக்கில் குறைபாடுள்ள பெண்கள

யோக முத்ரா

Image
செய்முறை :                       விரிப்பில் அமர்ந்து முதலில் பத்மாசனத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் . இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையினால் லேசாகப் பிடித்துக்கொண்டு மெதுவாக முன்பக்கமாகக் குனிய வேண்டும் . குனிந்து தரையை நெற்றி தொடும் அளவிற்கு இடுப்பை முன்நோக்கி வளைக்க வேண்டும் . இப்படி குனியும்போது மூச்சை வெளியே விடவேண்டும் . நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும் இந்த ஆசனம் முடிந்தவுடன் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூன்று அல்லது நான்கு முறை ஆழ்ந்த சுவாசம் செய்ய வேண்டும் .  நேர அளவு :                       பத்து முதல் இருபது வினாடிகள் செய்ய வேண்டும் . இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம் .  பலன்கள் :                      முதுகெலும்பு நேராகும் நுரையீரலிலுள்ள நோய்க் கிருமி கள் நாசமாகும் . முக்கியமாக மலச்சிக்கல் நீங்கும் . யோக முத்ராசனத்தை மேற்கொள்ளும் போது வயிறு நன்கு மடிக்க ப்பட்டு குடல்கள் நன்கு அழுத்தப்படுகிறது . இதனால் குடல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து குடல் பகுதிகள் நன்கு இயங்கப்படுகின்றது சிறுநீரகக் கோளாறுகள் , கல்லீரல் ,

புஜங்காசனம்

Image
செய்முறை :                           விரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு இரண்டு குதி கால்களையும் ஒன்று போல் சேர்த்துக் கொள்ள வேண்டும் . உள்ளங்கைகளை மார்புக்கு நேராக விரிப்பில் பன்றிக் கொண்டு முகவாய்க் கட்டையையும் விரிப்பின் மேல் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு சுவாசத்தை மெதுவாய் விட்டுக் கொண்டே கை ஊன்றியவாறு தலையைத் தூக்கிப் பின்னுக்கு வளைக்கவும்   நேரஅளவு :                       பத்து முதல் பதினைந்து வினாடிகள் இரண்டு மூன்று முறை செய்யலாம் .  பலன்கள் :                  இப் பயிற்சியானது உடலைத் தாங்கி நிற்கும் முக்கிய உறுப்பான முதுகெலும்புக்குச் சிறந்த பயிற்சியாக அமைந் திருக்கிறது . வயிற்று மார்புச் சதைகள் தளர்த்தி நீட்டப்பட்டு மேல் முதுகு , கழுத்துச் சதைகள் மடக்கி இழுக்கப்பட்டு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது . அதனால் முதுகு , நரம்பு களும் அதைச் சேர்ந்த சதைக் கோளங்களும் வீரிய பலம் பெறுகின்றன . கழுத்துக்கு நல்ல பயிற்சி கிடைப்பதால் சுளுக்கு ஏற்படாது . கைகளுக்கு நல்ல வலிமை கிடைக்கின்றது  கூன் முதுகு நிமிர்ந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் .  பயிற்சியாளர் கவனத்திற்கு :           

மயூராசனம்

Image
மயூராசனம் என்றால் மயில் இருக்கை என்று பெயர் மலச்சிக்கலைப் போக்குவரத்து உன்னதமான ஆசனம் செய்முறை:                          விரிப்பின் மேல் மண்டியிட்டு உட்காரவும் முன்னால் குனிந்து இரு உள்ளங்கைகளையும் முழங்கால்களின் அருகில் கைவிரல்கள் கால் பக்கம் பார்க்கும்படியாக விரிப்பில் ஊற்றவும் முழங்கைய்களைத் தொப்புளில் அமர்த்தி மண்டியிட்ட கால்களை பின் பக்கம் நீட்டவும் பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கால்களை விரைப்பாக முழங்கால் வளையாமல் உயரத்துக்கும் படத்தில் காட்டியபடி உடல் முழுவதுமாக முழங்கைகளின் பலத்தினால் தாங்கி சம நிலையில் நிறுத்தவும் ஆசன வாயில் மூச்சை சிறிது அடக்கி கொள்ளலாம் நேர அளவு :                            பத்து முதல் இருபது வினாடி வரையில் நிறுத்தலாம் . ஒரு முறை செய்தால் போதுமானது .  பலன்கள் :                          இப்பயிற்சியினால் வயிற்றின் உள்ளுருப்புகள் நன்றாக அமுக்கப்படுவதால் ஆங்காங்குத் தேங்கி நிற்கும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்பட்டுக் குடலானது நன்கு சுத்தப் படுத்தப்படுகிறது . தொந்தியைக் கரைப்பதுடன் மூலம் நீரிழிவு , மஞ்சட் காமாலை , மலச்சிக்கல் போன்ற கொடிய வியாதிகளையும் போக்க

ஏகபாதஆசனம்

Image
 ஏகபாத ஆசனம் : ஏக என்றால் ஒன்று பாத என்றால் பாதம் . ஒரு பாதத்தில் நிற்கிற நிலை .   செய்முறை :  நேராக நிற்க வேண்டும் . வலது காலைத் தரையில் நன்றாக ஊன்றி இடது காலைத் தூக்கி வலது தொடையின் மீது வைக்கவும் . இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும் . இப் போது கைகளை உயர்த்தி தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும் . இப்போது மூச்சை உள்ளிழுத்து முன்னால் ஏதாவது ஒரு புள்ளியில் கண்களை கவனமாக வைக்க வேண்டும் . ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும்  நேர அளவு :  1 நிமிடம் செய்யலாம் ஒரு முறை போதுமானது .  பலன்கள் :  கால் தசைகள்  வலிமை பெறுகின்றன . ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது . மனதில் சமநிலை ஏற்படுத்து கிறது . சிரசாசனத்தின் பயனை அதிகரிக்கிறது.  பயிற்சியாளர் கவனத்திற்கு :  இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்யவும் . அதிக பட்சம் இரண்டு முறை . 

சலபாசனம்

Image
 செய்முறை :                           முகம் தரைநோக்கி இருக்குமாறு கவிழ்ந்து படுக்கவும் . விரல்களை மூடி இரண்டு கைகளையும் வயிற்றுக்கு கீழே குப்புற வைத்துக் கொள்ள வேண்டும் . முகவாய்க்கட்டை தரைமீது படிய வேண்டும் இரண்டு கால்களையும் விரைப் பாக நீட்டி இருக்க வேண்டும் . இப்போது உடலை விரைப்பாக்கி கைகளை நன்றாக அழு த்தி இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும் . அப்படியே தொடை , கீழ்வயிறு என்று பின்பக்க பாகங்களை மேல் நோக்கி உயர்த்தவும் . ஆசன நிலையில் இயல்பான சுவாசம் .  நேர அளவு :                           பத்து முதல் இருபது வினாடிகள் இரண்டு மூன்று முறை செய்யவும் .  பலன்கள் :                     சிறுநீரகங்கள் , கல்லீரல் , போன்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும் இப்பயிற்சியின் மூலம் புத்துணர்ச்சி பெறுகின் றன . தவிரவும் வாயு , உபத்திரவம் , வயிற்றுக் கடுப்பு மலச் சிக்கல் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது .  பயிற்சியாளர் கவனத்திற்கு :                               வயிற்றில் ஆப்ரேஷன் செய்து கொண்ட ஆண்களோ பெண்களோ கண்டிப்பாக இப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது . மீறி மேற்கொண்டால் ஆப்ரேஷன் செய்த இடத்தில்

சர்வாங்காசனம்

Image
இந்த ஆசனப்பெயரைப் பார்க்கும் போதே அதன் உயர்வு தெற்றெனத் தெரிகிறது . சர்வாங்கம் , சர்வ அங்கம் , அதாவது உடலின் சகல உறுப்புகளுக்கும் சிறந்த சக்தியைக் கொடுக்கும் உன்னதமான இருக்கை நிலை உயர்ந்த நிலைக் குத் தகுந்த உன்னதப் பெயர் சர்வ அங்கங்களுக்கும் அபூர்வ ஆரோக்கிய சக்தியை அளிப்பதால் சர்வாங்கா சளம் என்று பெயர் . இல்லற வாழ்க்கை நடத்தும் இளைஞர்களும் , முதியோர் களும் , சிறுவர்களும் , ஆண் பெண் வேற்றுமையின்றி ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் மற்ற ஆசனங் களை விட மிக முக்கியமாக ஞாபகம் வைத்துப் பயின்று வர வேண்டியதுஇச்சர்வாங்காசனமே .  செய்முறை :  சம தரையில் விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும் , கைகளை விரிப்பின் மீது அமர்த்தி உடலோடு சேர்த்து வைக்கவும்  கால்களை இரண்டையும் சேர்த்துக் கொண்டு முழங்கால் உயர்த்தித் தொடைகளை மடக்கி வயிற்றோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும் .  பின்பு பாதங்களை மேல் நோக்கும் படியாக வைத்துக் கொண்டு முதுகை மெதுவாகக் கிளப்ப வேண்டும் . கைகளை இடுப்பின் இரு பக்கங்களிலும் ஆதாரமாகக் கொடுத்து முதுகை மேலே தூக்கவும் .  தலையும் கழுத்தும் இடைவெளி இல்லாமல் விரிப்பின் மேல் நன்றாகப் பதியும்படி செய்து

சிரசாசனம்

Image
உடலுக்கு தலையே பிரதானம் என்பது போல ஆசனங் கள் அனைத்திலும் மிக முக்கி ... மானதும் பயனுள்ளதும் இந்த சிரசாசனம் . தலையை பிரதானமாகக் கொண்டதினால் இதற்கு சாசாசனம் என்று பெயர்  செய்முறை :  சிரசாசனம் செய்வதற்கு முன்பு ஒரு அங்குலம் கனமுள்ள மடித்த துண்டின் மேல் சிரசை வைத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி கொண்டு கால்களை மெல்லத் தூக்கி படத்தில் காட்டியபடி நிறுத்திக் கொண்டு பச்சை மெல்ல வெளியில் விட வேண்டும் .   பிறகு இயற்கையாக மூச்சை வெளியே விடவும் உள்ளுக் குள் இழுக்கவும் வேண்டும் . சிரசாசனத்தைப் புதியதாகப் பழகுபவர்கள் ஆரம்பத்தில் சுவரோமாய் நின்று பழக வேண்டும் . பழக பழக சுவரின் துணையில்லாமலேயே தனியாக பழகலாம்.  சிரசாசனம் பழகும்போது உடல் இடுப்புக்கருகிலோ , கழுத்துக்கருகிலோ , முழங்கால் பகுதியிலோ வளைந்திருக் கக் கூடாது . உடல் ஒரே நேர்க் கோட்டில் இருக்க வேண்டி யது மிகவும் அவசியம்.   ஆரம்பகட்டத்தில் கால்களை மேலே தூக்குவதற்கு துனைக்கு எவரையாவது அருரில் வைத்துக் கொண்டு பழகினால் போகப்போக ஒரே நொடியில் தலையைத் தரையில் ஊன்றி சட்டென்று கால்களை மேலே தூக்கி விட முடியும் .  நேர அளவு :  நிமிடங்கள் இந்த சிரசாசனத்தை

பத்மாசனம்

Image
 செய்முறை :  சமமான தரையில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்தவும் முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் நீது வைக்கவும் பிறகு அதே போன்று இடது காலை மடத்து வலது தொடையின் மீது வைக்கவும் குதிகால்கள் இருபுறமும் அடிவயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல் அமைய வேண்டும் . இடது கை இடது முட்டியில் வைக்கவும் வலது கை வலது முட்டியில் வைக்கவும் . உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவும் ஆள் காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்கவும் ( சின்முத்ரா )முதுகை சற்றும் கோணல் இல்லாத நிலையில் நன்றாக நிமிர்த்தி வைக்கவும் கண்களை மூடி மனதை அமைதியாக வைக்கவும் நிலையில் இயல்பான சுவாசத்தில் இருக் க வேண்டும் .  நேர அளவு :   முதலில் 1 - 5 நிமிடங்கள் வரை செய்யலாம் . பழகின பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்  பலன்கள்: பிராணாயமம் , ஜபம் , தியானம் செய்வதற்கு மிகவும் உயர்ந்த ஆசனம் . இடுப்புப் பகுதிக்கு மிகுந்த இரத்த ஓட்டம் அளித்து தண்டுவிட அடி எலும்பு மற்றும் முதுகு தண்டு விட எலும்புகளை வலுப்படுத்துகிறது . வயிற்றின் இரத்த ஓட்டமும் சரிப்படுத்தப்படுகிறது  பயிற்சியாளர் கவனத்திற்கு :  தரையில் அமர்ந்து பழக்கமற்ற நபர

நட்சத்திர பழம்

Image
நட்சத்திர பழம் பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம். நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாகச் சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் கு

தமிழ் நீதி கதைகள்

ஒரு மன்னன் ஒரு நாள் அவன் நாட்டிலிருந்த காட்டில் வாழ்ந்து கொண்டு இருந்த ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான். செடி நாட்டுக்கு கொண்டிருந்த ஞானி, மன்னன் வருவதைப் பார்த்தவுடன் தன் குடிலுக்குள் சென்று விட்டார் மன்னன் திகைத்தார். ”ஞானியே, நான் வந்திருக்கிறேன், வெளியே வந்து அருள் தாருங்கள்”அவர் வரவில்லை. நான் இந்த நாட்டின் மன்னன் வந்து இருக்கிறேன், வெளியே வாருங்கள்”அவர் வரவில்லை. மன்னன் பொறுமை இழந்தான்.“நான் இந்த நாட்டு மன்னன் வந்து இருக்கிறேன், உங்கள் அருளுக்காக”  உள்ளிருந்தே ஞானி சொன்னார், ”நான் செத்த பின் வா!”மன்னன் குழம்பினான் . அமைச்சரைக் கேள்விக் குறியுடன் பார்த்தான். அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தனர். அவர் சொன்னார் ”அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் ‘’நான்’’ என்ற ஆணவத்தை; அதை துறந்து வரச் சொல்கிறார் ”என்று. நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத் துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!  "நான்" என்னும் அகங்காரம் உள்ளவரை எவராலும் வாழ்வில் வெற்றி அடைய முடியாது..  "EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது, கண்ணில் விழுந்த தூசு போன்றது. அந்தத

குல தெய்வம் வழிபாடு

குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத் துவம் கொடுப்பது ஏன்? குலத்தினை காக்கும்தெய்வம் குலதெய்வம் ஆ  கும் தெய்வங்களில்மிகவும்வலிமையானதெய்  வம் குலதெய்வம்ஆகும் குலதெய்வம் தான் நம  க்கு எளிதில் அருளினைதரும் மற்ற தெய்வங்க  ளின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத்  தரும் குல தெய்வம்  பெரும்பாலும்  சிறு  தெய்வமாக வேகாணப்படும் சிறுதெய்வம்என்று அவற்றை அலட்சியப் படுத்தக்கூடாது அதன் சக்தியை அ  ளவிட முடியாது குல தெய்வத்தை எவர்  ஒருவர் விடாமல் தொட  ர்ந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வே  ண்டும் வரம் எல்லாம்கிடைக்கும் ஒருவரது வம் சாவளியில்வரும்  தாத்தா  பாட்டி தாய்தந்தைய  ர் போன்றோர்கள்  குல  தெய்வத்திற்கு  செய்ய வேண்டிய வருடாந்திரபூஜையைமுறையாகசெ  ய்ய தவறினாலோ குலதெய்வத்தை அடியோடு  மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வ  ணங்க தொடங்கி குலதெய்வ கோயிலிற்கு செ ல்வதைமுற்றிலும் தவிர்த்துவிட்டாலோகுலதெ ய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும் இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இ  து தொடராமல் இருக்க சாபநிவர்த்தி செய்வது அவசியம் நம் முன்னோர்கள்   எந்த முறையில்  குல  தெய்வத்தை  வணங்கினார்களோ  அதே முறைப்படி நாம் வணங்கவே

கோயில் வரலாறு

கோவில்கள் வரலாறு  அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு  ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.  எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் பொருட்டு ஈரஓடு என பெயர் பெற்றது என சொல்லப்படுவதும் உண்டு.  படைப்பு கடவுளான பிரம்மா இங்கு தன்னை மறந்து சிவனை பூஜித்ததால் மறந்தை எனவும், மயிலை எனவும், ஆர்த்த கபாலபுரி எனவும் பல பெயர்களை ஈரோடு நகர் தாங்கியிருந்தது இலக்கியங்கள் வழியாக தெரிய வருகிறது.  கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிற

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி