யோக முத்ரா

செய்முறை : 

                     விரிப்பில் அமர்ந்து முதலில் பத்மாசனத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் . இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையினால் லேசாகப் பிடித்துக்கொண்டு மெதுவாக முன்பக்கமாகக் குனிய வேண்டும் . குனிந்து தரையை நெற்றி தொடும் அளவிற்கு இடுப்பை முன்நோக்கி வளைக்க வேண்டும் . இப்படி குனியும்போது மூச்சை வெளியே விடவேண்டும் . நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும்
இந்த ஆசனம் முடிந்தவுடன் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூன்று அல்லது நான்கு முறை ஆழ்ந்த சுவாசம் செய்ய வேண்டும் . 

நேர அளவு : 

                     பத்து முதல் இருபது வினாடிகள் செய்ய வேண்டும் . இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம் . 

பலன்கள் : 

                    முதுகெலும்பு நேராகும் நுரையீரலிலுள்ள நோய்க் கிருமி கள் நாசமாகும் . முக்கியமாக மலச்சிக்கல் நீங்கும் . யோக முத்ராசனத்தை மேற்கொள்ளும் போது வயிறு நன்கு மடிக்க ப்பட்டு குடல்கள் நன்கு அழுத்தப்படுகிறது . இதனால் குடல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து குடல் பகுதிகள் நன்கு இயங்கப்படுகின்றது சிறுநீரகக் கோளாறுகள் , கல்லீரல் , பித்தப்பைக் கோளாறு கள் நீங்குகின்றது . இடுப்பு சிறுத்து வயிறு ஒடுங்கி அழகான வடிவமைப்பு பெறுகின்றது .  


பயிற்சியாளர் கவனத்திற்கு :

                            இந்த ஆசனத்தைப் பயிலும் தொடக்க காலத்தில் தலை யை தரையில் தொடும் அளவு முதுகை வளைக்க இயலாத வர்கள் தம்மால் எவ்வளவு தூரம் வளைக்க முடியுமோ அவ்வளவு தூரம் வளைத்தால் போதுமானது . அதே போன்று கைகளை எவ்வளவு உயரத்திற்கு சிரமம் இல்லா மல் உயர்த்த முடியுமோ அந்த அளவு உயர்த்தினால் போது மானது . 

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி