Posts

Showing posts from February, 2021

ரூ. 49 லட்சம் மதிப்பில் 1.01 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல். ஒருவர் கைது

Image
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட்- 8515 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஹாரூன் ரஷீத் (22) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் அவரது முழு கால் சட்டையின் பையில் கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்ட 2 கன பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள்ளிருந்து ரூ. 17 லட்சம் மதிப்பில் 350 கிராம் எடையிலான 6 தங்க வெட்டுத்துண்டுகள் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் சார்ஜாவில் இருந்து இண்டிகோ 6ஈ-8245 என்ற விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மது மனாஸ் (25) என்பவரை சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 740 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பில் 660 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதோடு சுங்கச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்த இரு வழக்குகளிலிருந்தும் மொத்தம் ரூ. 49 லட்சம் மதிப்பில் 1.01 கிலோ தங்கம்

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

Image
  குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியா இன்று வாய்ப்புகள் உள்ள நாடாக இருப்பதாகவும், உலகத்தின் பார்வை இந்தியா மீது இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த உலகத்தின் நலனுக்கு, இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 75வது சுதந்திர ஆண்டில் இந்தியா நுழைவதால், நாம் இதை உத்வேகத்தின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் மற்றும் நூறாவது சுதந்திர ஆண்டான 2047-ல் இந்தியாவுக்கான நமது தொலை நோக்கின் உறுதி மொழிகளுக்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார். கொவிட் தொற்றை திறம்பட கையாண்டது, ஒரு கட்சியின் வெற்றியோ அல்லது தனி நபரின் வெற்றியோ அல்ல. இது நாட்டின் வெற்றி. இதை அவ்வாறே கொண்டாட வேண்டும் என பிரதமர் கூறினார். இந்தியா, போலியோ, பெரியம்

உத்தராகண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடர்: மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்

Image
  உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிப்பாறைகள் திடீர் வெடிப்பு நிகழ்வால் அங்கு நிலவும் இயற்கை பேரிடர் நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் திரு. ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பனிப்பாறைகள் திடீரென்று வெடித்ததால் ரிஷிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 13.2 மெகாவாட் திறன் கொண்ட ரிஷிகங்கா நீர்மின் திட்ட கட்டமைப்புகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தௌலிகங்கா ஆற்றின் மீது தபோவன் பகுதியில் செயல்படும் தேசிய அனல்மின் கழகத்தின் நீர் மின்சார திட்டமும் இந்த இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளானது. சம்பந்தப்பட்ட முகமைகள், மாநில நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமைச்சரவை செயலாளர் உத்தரவிட்டார். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டவும், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை விரைவில் மீட்கவும் அவர் வலியுறுத்தினார். மீட்பு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்து இயல்பு நிலை திரும்பும் வரையில் கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார். காணொலி காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்

சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கம் பறிமுதல்

Image
  சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.48.9 லட்சம். துபாயில் இருந்து ‘பிளை துபாய்’ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்ற பயணியிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 2 தங்க பசை பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 416 தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.19.9 லட்சம். மற்றொரு சம்பவத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில், சீட்டுக்கு அடியில் 600 கிராம் எடையில் 6 தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.29 லட்சம். மொத்தம் 1.01 கிலோ எடையில், ரூ.48.9 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

1.14 கோடி ரூபாய் மதிப்பிலான 2.32 கிலோ தங்கம் சென்னை சுங்க துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது ஒருவர் கைது

Image
  கடத்தல்காரர்கள் தங்கம் கடத்துவதற்கு புதிய முறையைக் கையாளுவதை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். துபாயிலிருந்து சர்வதேச விமானமாக வரும் விமானங்களில் தங்கத்தை மறைத்து வைத்து அதன் பிறகு அதே விமானம் இந்தியாவில் குவஹாத்தி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு இடையே இயங்கும் விமானமாகப் பயணிக்கும் போது, அத்தகைய விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மூலமாக தங்கம் கடத்துவது, அதன் பின்னர் அதே விமானம் குவஹாத்தியில் இருந்து சென்னை மார்க்கத்தில் இயங்கும்போது அதை அங்கிருந்து பெற்றுக் கொள்வது என்ற விதத்தில் தங்கம் கடத்தப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இண்டிகோ விமானம் 6E 66 விமானத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த விமானத்தில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின்போது நீள் சதுர வடிவிலான, கனமான துண்டுகள், கருப்பு டேப் மூலம் ஒட்டப்பட்டு நூலால் கட்டப்பட்டு, உலோகத் துண்டுடன் இணைக்கப்பட்டு, விமான இருக்கை ஒன்றில், துளையுள்ள குழாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வெட்டித் திறந்து பார்த்தபோது 10 தோலா எடை கொ

ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் : ஒருவர் கைது

Image
  சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி பொருட்கள் கிடங்கில், 24.5 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைப் பொருளை சுங்க அதிகாரிகள பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனம்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி பொருட்கள் கிடங்கில், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமையல் பாத்திரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்ட அட்டை பெட்டி பிரித்து சோதனையிடப்பட்டது. அப்போது, தேங்காய் துருவியின் அடிபாகத்தில் 3 சிறிய மரப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் வெள்ளை நிற பவுடர் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சோதனை செய்தபோது, அது தடை செய்யப்பட்ட சூடோபெட்ரைன் என்ற போதைப் பொருள் என தெரியவந்தது. மொத்தம் 12 பாலித்தீன் பாக்கெட்டுகளில் 24.5 கிலோ சூாடோபெட்ரைன் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2.45 கோடி. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெட்டியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய சென்னையைச் சேர்ந்த வி.எம். எக்ஸ் இம்ப் நிறுவனத்திலும் சோதனை நடத்தப

புதிய ரயில்கள் அறிமுகம்

Image
  நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டு 266 ரயில்களும், 2019-20-ஆம் ஆண்டு 153 ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹுமசஃபர், தேஜாஸ், அந்த்யோத்யா, உத்கிரிஷ்ட் இரட்டை அடுக்கு குளிர்பதன பயணிகள் சேவை (உதய்) உள்ளிட்டவற்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது, 2020 மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை 53585 சரக்கு ரயில்களும், 3826 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன. 2020 மார்ச் 25 முதல் 2021 ஜனவரி 27 வரை 318142 சரக்கு ரயில்களும், 8899 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய 63 ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,900-க்கும் அதிகமான பெட்டிகளில்

மூலிகை மருந்துகள் மற்றும் ஆயுஷ் மருத்துவத்துக்கு ஊக்கம்

Image
  நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஆயுர்வேதா, யோகா & நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி இணை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ, கீழ்காணும் தகவல்களை வழங்கினார். மூலிகை மருந்துகளை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஆரோக்யா கண்காட்சிகள், மேளாக்கள் உள்ளிட்டவற்றை தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்துதல், ஆயுஷ் சிகிச்சை முறைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூலிகைத் தாவரங்களை பயிரிடுவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை, தேசிய மருத்துவ தாவரங்கள் இயக்கத்தின் கீழ் 30282.4 ஹெக்டேர் நிலத்திற்கும், தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 3931 ஹெக்டேர் நிலத்திற்கும் என மொத்தம் 34213.4 ஹெக்டேர் நிலத்திற்கு ஆதரவளிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை நாடு முழுவதும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது: வருகிறது புது விதிமுறை

Image
ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசிக்கிறது. மேலும், இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனையில் (Driving test) கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.  இந்த நடவடிக்கை, போக்குவரத்துத் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற டிரைவர்கள் கிடைக்க உதவும். இது அவர்களின் திறனை அதிகரிப்பதோடு, சாலை விபத்துக்களையும் குறைக்கும். பொது மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்காக, இந்த வரைவு அறிவிப்பு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெற்ற பின்பு இது முறைப்படி வெளியிடப்படும்.

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

Image
போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள் வரை இந்திய விமானப்படை இயக்குகிறது. இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது. தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது. போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. இந்த தேவைகளுக்காக, மத்திய

பழைய பல்லாவரம் அஞ்சலகப் பகுதிகள் மறுசீரமைப்பு

Image
அஞ்சல் துறை, பழைய பல்லாவரம் அஞ்சலகத்தின் சில விநியோகப் பகுதிகளை மாற்றியமைத்துள்ளது. தற்போது பழைய பல்லாவரம் அஞ்சலகம் (600 117), கிருஷ்ணா நகர் முக்கிய சாலை, விஷால் நகர் ஆகிய பகுதிகளின் அஞ்சல் விநியோகப் பணிகளை கவனித்து வருகிறது. இம்மாதம் 8-ந் தேதி முதல் (8.2.2021) இப்பகுதிகளின் தபால் விநியோகப் பணிகள் மடிப்பாக்கம் அஞ்சலகத்திற்கு (600091) மாற்றப்பட உள்ளன. எனவே இப்பகுதிகளில் வசிப்பவர்கள் இனி 600091 என்ற பின்கோடைப் பயன்படுத்துமாறு சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேட்டுக் கொண்டுள்ளார்.

செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை

Image
வரலாற்றில் செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என பிரதமர் இன்று வருத்தத்துடன் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், சௌரி சௌரா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை காணொலி காட்சி மூலம்  பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘குறைவாக அறியப்பட்ட தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை, மக்கள் முன் கொண்டுவரும் நமது முயற்சிகள், அவர்களுக்கு செலுத்தும் உண்மையான புகழாரமாக இருக்கும்’’ என்றார்.  நாடு 75வது சுதந்திர ஆண்டில் நுழையும் வேளையில், இது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.  சௌரி சௌரா தியாகிகள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காதது துரதிருஷ்டம் என பிரதமர் கூறினார். சௌரி சௌரா சாதாரண மக்களின் சுய உந்துதலால் நடந்த போராட்டம். ‘‘இந்த போராட்டத்தின் புரட்சிகள் பற்றி வரலாற்று பக்கங்களில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டாலும்அவர்களின் ரத்தமும், இந்நாட்டின் மண்ணில் கலந்துள்ளது’’ என பிரதமர் குறிப்பிட்டார். ஒரு நிகழ்வுக்காக 19 பேர் தூக்கிலிடப்பட்டதை, சுதந்திர போராட்டத்தின் ஒரு அத்தியாயத்தில் கண்டுபிடிப்பது அரிதாக உள்ளது

ரயில்வே துறை குறித்த முக்கிய அறிவிப்புகள்

Image
ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் இந்திய ரயில்வேயை தயார்படுத்துவதற்காகவும், 2021 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும், 2021-22 நிதியாண்டிலும் தனது பல்வேறு மண்டலங்களில் செயல்படுத்துவதற்கான 56 திட்டங்களை இந்திய ரயில்வே அடையாளம் கண்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், மூலதன செலவினங்களுக்காக ரூ 2,15,058 கோடியை இந்தாண்டு ரயில்வே செலவிடவுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, & பொது விநியோகம் அமைச்சர் திரு.பியூஷ் கோயல், கிழக்கு மற்றும் மேற்கு பிரத்தியேக சரக்கு ரயில்பாதைகளின் இரு பிரிவுகளை பிரதமர் திறந்து வைத்துள்ளதாக தெரிவித்தார். ரயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கிசான் ரயிலின் மூலம் எடுத்து செல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்கள் மீது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 2017-18-ஆம் ஆண்டு 380 ஜோடி ரயில்களில் இருந்த பேண்ட்ரி கார்/மினி பேண்ட்ரி எனப்

மண்டல அளவில் ஓய்வூதியருக்கான குறைதீர் முகாம்

Image
  அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப் பெறாதவர்களின் குறைகள், ரயில்வே மற்றும் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர்கள் அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மண்டல அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட குறைதீர் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும், இந்த முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை வரும் மார்ச் மாதம் 5-ந் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். “ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாம் 2021” என்று தபால் உறையின் மேற்பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: திரு.பொ.சோணை, முதுநிலை கணக்கு அதிகாரி, அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தென் மண்டலம், (தமிழ்நாடு), மதுரை-625002, திருமதி. அனிதா மகாதாஸ், பொது மேலாளர் (அஞ்சலக கணக்கு மற்றும் நிதி), தமிழ்நாடு வட்டம், சென்னை-600 008 என்ற முகவரிக

பட்டியல் பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள்

Image
  பட்டியல் பிரிவு மற்றும் இதர மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. பட்டியல் பிரிவு, நாடோடி பழங்குடியினர், நிலமில்லா விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைஞர்கள் ஆகிய பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வெளிநாட்டில் பயில்வதற்கான நிதிஉதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. 2015-16-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் கற்பதற்கு நிதியுதவி பெறுவதற்காக 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 19 பேர் அயல்நாடுகளுக்கு சென்ற நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 63 பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர் சந்த் கெலாட் மேற்கண்ட தகவல்களை அளித்தார்.

ரூ. 29.74 லட்சம் மதிப்பில் 588 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

Image
  தங்கம் கடத்தப்படலாம் என்று உளவுப்பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏஐ-906 என்ற விமானத்தில் சென்னை வந்த நசருல் ஹக் (23) என்பவர் சந்தேகத்தில் பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 523 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை அவர் தமது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. சுங்கச் சட்டத்தின்கீழ் அவரிடமிருந்து ரூ. 21.74 லட்சம் மதிப்பிலான 430 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நிகழ்வில், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1687 என்ற விமானத்தில் சென்னை வந்த கடப்பாவைச் சேர்ந்த சிவசங்கர் ரெட்டி (34) என்பவரை விமான நிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் கம்பியில்லா துளையிடும் கருவி ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த கருவியைத் திறந்து பார்த்தபோது ரூ.8 லட்சம் மதிப்பில் 158 கிராம் எடையில் வட்டமான ஓர் தங்கத் துண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இருவழ

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி

Image
 தி மு க தலைவர் ஸ்டாலின்அவர்களிடம், ஆரணியில் நடைபெற்ற உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், சிலிண்டர் வெடித்து தனது அம்மா இறந்த நிலையில், குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தை அதிமுக அரசு வழங்கவில்லை என எழிலரசி என்ற இளம்பெண் தெரிவித்தார். அவரது கோரிக்கை குறித்து உடனே அரசு அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என தலைவர் அறிவித்த நிலையில், தமிழக அரசு உடனே வங்கிக்கணக்கில் ரூ.2 இலட்சத்தை செலுத்தியது. தனது கோரிக்கையை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய கழக தலைவர் அவர்களை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில், சந்தித்து நன்றி தெரிவித்த எழிலரசி குடும்பத்தினருக்கு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், மத்திய அரசு உதவிகளை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விரைந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/தனியார் பள்ளிகள்/ அரசு பள்ளிகளோடு இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது

Image
  அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/தனியார் பள்ளிகள்/ அரசு பள்ளிகள் உள்ளிட்டவற்றோடு இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்குவதற்கான அறிவிப்பு 2020-21 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது 2021 பிப்ரவரி 1 அன்று நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விருப்பம் உள்ள அரசு / தனியார் பள்ளிகள் / அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து சைனிக் பள்ளிகளின்கோட்பாடுகள், மதிப்பு முறைகள் மற்றும் தேசிய பெருமையோடு இணைந்த சிபிஎஸ்சி பிளஸ் வகையை சேர்ந்த பள்ளிக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். சைனிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தை சார்ந்து இயங்க உள்ள ஏற்கனவே இருக்கும் அல்லது புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளை இணைத்துக் கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கிறது. தற்போது நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்குகின்றன. 2021-22 கல்வியாண்டில் இருந்து, அனைத்து சைனிக் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

$500 மில்லியன் மதிப்பிலான பத்திரங்களை பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டது

Image
  எரிசக்தி துறையில் இயங்கும் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், 2031 மே 16  முதிர்வு தேதியாக நிர்ணயிக்கப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் $500 மில்லியனை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. இந்த வருடத்தில் இது வரையில் வெளியிடப்பட்ட பத்திரங்களில் நீண்ட முதிர்வு காலம் கொண்டது இதுவாகும். பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இரண்டாம்  நிலை பத்திரங்களுக்குள் 3.35 சதவீதம் நிலையான கூப்பன்களை இப்பத்திரங்கள் கொண்டிருக்கும். 5.1 மடங்கு அதிக சந்தாவோடு, சுமார் $2.55 பில்லியன் மதிப்பில் பணி புத்தகம் உள்ளது. பத்திரங்களின் மூலம் திரட்டப்பட்ட நிதி, இந்திய ரிசர்வ் வங்கியின் வெளிப்புற வர்த்தக கடன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு எரிசக்தி துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு உபயோகிக்கப்படும்.

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி