ரூ. 49 லட்சம் மதிப்பில் 1.01 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல். ஒருவர் கைது



உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட்- 8515 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஹாரூன் ரஷீத் (22) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் அவரது முழு கால் சட்டையின் பையில் கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்ட 2 கன பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள்ளிருந்து ரூ. 17 லட்சம் மதிப்பில் 350 கிராம் எடையிலான 6 தங்க வெட்டுத்துண்டுகள் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு வழக்கில் சார்ஜாவில் இருந்து இண்டிகோ 6ஈ-8245 என்ற விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மது மனாஸ் (25) என்பவரை சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 740 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பில் 660 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதோடு சுங்கச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த இரு வழக்குகளிலிருந்தும் மொத்தம் ரூ. 49 லட்சம் மதிப்பில் 1.01 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி