Posts

Showing posts from November, 2020
 அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு அவிநாசியப்பர் கோவில் அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது. ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். அழிவு இல்லாத திருக்கோவில் தான் இந்த அவினாசி. இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்தத் திருத்தலத்தில் நாம் வழிபடும் இறைவனின் பெயர் அவிநாசி அப்பர். இந்தக் கோவிலில் தேவி கருணாம்பிகை, அவிநாசியப்பருக்கு வலதுபுறம் இருப்பது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. தேவாரத் திருத்தலங்களுல் அவினாசி அப்பர் கோவிலும் அடங்கும். சுந்தரர் தேவாரப் பாடலை பாடியது இத்தலத்தில்தான். மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள். அந்த சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோவிலில் வைத்து பூஜை செய்து விட்ட பின்பு தான் அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை இந்த அவிநாசியப்பர் அருளுகின்றார். தல வரலாறு அவிநாசியப்பர் திருக்கோவில் குளத்தங்

பூமிக்கடியில்_கட்டப்பட்ட_கோவில்

Image
 பூமிக்கடியில்_கட்டப்பட்ட_கோவில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது.   காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம்.   இங்குதான் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. முன்புறத்தில் #நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் #வாவிக் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிகள் உள்ளன.   கீழே சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அபூர்வமான அமைப்பு இது.  மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெருமாள் கோவில் #பூமிக்கடியில் உருவாக்கப்பட்டு அதற்குள் அழகிய மண்டபமும் உள்ளது. அதன் நடுவே தான் வாவிக் கிணறு உள்ளது.   இந்த கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்த கோவில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது.   சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்காக இந்த தண்ணீரை வெளியேற்றி விடு

தில்லி காவலர் தேர்வு 2020 குறித்த முக்கிய அறிவிப்பு

Image
 பணியாளர் தேர்வாணையம், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) தில்லி காவல் தேர்வு 2020-ஐ கணினி வழியாக நடத்த உள்ளது. தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்பிலிருந்து இதற்கான மின் அனுமதி சான்றிதழை பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள் விண்ணப்பதாரர் அளித்துள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படும். தென்னிந்தியாவில் இந்தத் தேர்வு, 27.11.2020, 01.12.2020, 02.12.2020, 03.12.2020, 07.12.2020, 08.12.2020 மற்றும் 09.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறும். தென்னிந்தியாவில் 136352 பேர் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளார்கள். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, குர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜய நகரிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம் நகர், மற்றும் வாரங்கல்லிலுமாக மொத்தம் 20 நகரங்களில் 32 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. நாள் ஒன்ற

பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வு

Image
 பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையைக் கண்காணிக்க, பூச்சிகளின் சத்தம் விரைவில் பயன்படுத்தப்படுவுள்ளது. இதற்காக ஒலி சிக்னல் தொகுப்பை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி வருகின்றனர். பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க, உருவவியல் அடிப்படையிலான பாரம்பரிய வகைபிரித்தல் முறை துல்லியமாக இல்லை. இது பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை தவறாக மதிப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. எனவே, இந்தச் சவாலை முறியடிக்க, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரஞ்சனா ஜெய்ஸ்வரா என்பவர் பூச்சிகளின் சத்தங்களை வைத்து டிஜிட்டல் தொகுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இனங்கள் பன்முகத்தன்மை மதிப்பீடு மற்றும் கண்காணிப்பில், ஒலி சிக்னல் டிஜிட்டல் சேமிப்புகளை கருவியாகப் பயன்படுத்த முடியும். கைப்பேசி செயலி மூலம் இந்த ஒலி சிக்னல் சேமிப்பை பயன்படுத்தி பூச்சிகளின் பரிணாமத்தை தானியங்கி முறையில் கண்டறிய முடியும். மேலும், நாட்டில் உள்ள புதிய பூச்சி இனங்களையும் அடையாளம் காண முடியும்.  டாக்டர் ஜெய்ஸ்வராவின் இந்த நவீன ஆராய்ச்சி, பூச்சி இனங்களின் எல்லைகளை வரையறுக்கும் கட்டமைப்பில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது.

லண்டனிலிருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் வெண்கல சிலைகளை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் மத்திய அமைச்சர்

Image
  லண்டனிலிருந்து மீட்கப்பட்ட பகவான் ராமர் ,  சீதை ,  லட்சுமணனின் வெண்கல சிலைகளை தமிழக அரசிடம் ,  மத்திய கலாச்சார துறை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆனந்தமங்கலத்தில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால் விஷ்ணு கோயில். இந்த கோயில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. இங்கிருந்த பகவான் ராமர் ,  சீதை ,  லட்சுமணன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த  1978- ஆம் ஆண்டு நவம்பர்  23  மற்றும்  24- ஆம் தேதிகளில் திருடு போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் பிடிபட்டனர். ஆனால் சிலைகள் லண்டனுக்கு கடத்தப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்த தகவல் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் புகைப்பட ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு குறித்து லண்டன் காவல்துறையிடம் ,  இந்திய தூதரகம் புகார் செய்தது. லண்டன் போலீசார் விசாரணை நடத்தி ,  லண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து ராமர் ,  சீதை ,  லட்சுமணன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்டம்பர்  15- ஆம் தேதி ஒப்படைத்தனர். இந்தியா கொண்டுவரப்பட்ட அந்த சிலைகளை ,  தமிழக அரசிடம் மத்திய

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி