மண்டல அளவில் ஓய்வூதியருக்கான குறைதீர் முகாம்
- Get link
- X
- Other Apps
அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப் பெறாதவர்களின் குறைகள், ரயில்வே மற்றும் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர்கள் அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மண்டல அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட குறைதீர் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும், இந்த முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை வரும் மார்ச் மாதம் 5-ந் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
“ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாம் 2021” என்று தபால் உறையின் மேற்பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: திரு.பொ.சோணை, முதுநிலை கணக்கு அதிகாரி, அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தென் மண்டலம், (தமிழ்நாடு), மதுரை-625002, திருமதி. அனிதா மகாதாஸ், பொது மேலாளர் (அஞ்சலக கணக்கு மற்றும் நிதி), தமிழ்நாடு வட்டம், சென்னை-600 008 என்ற முகவரிக்கு சாதாரண, விரைவு, பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரடியாக இம்முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
முகாம் நடைபெறும் இடங்கள்: கலந்தாய்வு அரங்கம், அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தென் மண்டலம், (தமிழ்நாடு), மதுரை-625002, தேதி: 07-04-2021, நேரம்: காலை 11 மணி.
சென்னையில் பொது மேலாளர் (அஞ்சலக கணக்கு மற்றும் நிதி), தமிழ்நாடு வட்டம், சென்னை-600 008 என்ற முகவரியில் நடைபெறும். நேரில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு காலை 11 மணிக்கு வரவும். நேரில் வர முடியாதவர்கள் முகாம் நடைபெறும் நாளில் மாலை 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பங்கு பெறலாம்.
எனவே ஓய்வூதியர்கள் தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, செல்போன் எண், அருகில் உள்ள அஞ்சலக முகவரி போன்றவற்றை குறைகளை அனுப்பும் தபாலுடன் அனுப்ப வேண்டும் என தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் க.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment