உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி

 தி மு க தலைவர் ஸ்டாலின்அவர்களிடம், ஆரணியில் நடைபெற்ற உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், சிலிண்டர் வெடித்து தனது அம்மா இறந்த நிலையில், குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தை அதிமுக அரசு வழங்கவில்லை என எழிலரசி என்ற இளம்பெண் தெரிவித்தார்.



அவரது கோரிக்கை குறித்து உடனே அரசு அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என தலைவர் அறிவித்த நிலையில், தமிழக அரசு உடனே வங்கிக்கணக்கில் ரூ.2 இலட்சத்தை செலுத்தியது.

தனது கோரிக்கையை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய கழக தலைவர் அவர்களை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில்,

சந்தித்து நன்றி தெரிவித்த எழிலரசி குடும்பத்தினருக்கு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி வழங்கினார்.

மேலும், மத்திய அரசு உதவிகளை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விரைந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!