சலபாசனம்

 செய்முறை : 

                         முகம் தரைநோக்கி இருக்குமாறு கவிழ்ந்து படுக்கவும் . விரல்களை மூடி இரண்டு கைகளையும் வயிற்றுக்கு கீழே குப்புற வைத்துக் கொள்ள வேண்டும் . முகவாய்க்கட்டை தரைமீது படிய வேண்டும் இரண்டு கால்களையும் விரைப் பாக நீட்டி இருக்க வேண்டும் . இப்போது உடலை விரைப்பாக்கி கைகளை நன்றாக அழு த்தி இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும் . அப்படியே தொடை , கீழ்வயிறு என்று பின்பக்க பாகங்களை மேல் நோக்கி உயர்த்தவும் . ஆசன நிலையில் இயல்பான சுவாசம் . 
நேர அளவு : 

                         பத்து முதல் இருபது வினாடிகள் இரண்டு மூன்று முறை செய்யவும் . 

பலன்கள் : 

                   சிறுநீரகங்கள் , கல்லீரல் , போன்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும் இப்பயிற்சியின் மூலம் புத்துணர்ச்சி பெறுகின் றன . தவிரவும் வாயு , உபத்திரவம் , வயிற்றுக் கடுப்பு மலச் சிக்கல் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது .

 பயிற்சியாளர் கவனத்திற்கு :

                              வயிற்றில் ஆப்ரேஷன் செய்து கொண்ட ஆண்களோ பெண்களோ கண்டிப்பாக இப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது . மீறி மேற்கொண்டால் ஆப்ரேஷன் செய்த இடத்தில்  தையல் பிரிந்து பல கோளாறுகளை ஏற்படுத்தி விடும் . தவிர மாரடைப்பு , இரத்த அழுத்தம் , இருதய நோய் , காச நோய் உள்ளவர்களும் இப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் இப்பயிற்சியை செய்யக் கூடாது . இதனால் கர்ப்பம் கலைந்துவிடக் கூடும் . ஆதலால் பிரசவித்த பின்பு இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி