உடலுக்கு தலையே பிரதானம் என்பது போல ஆசனங் கள் அனைத்திலும் மிக முக்கி ... மானதும் பயனுள்ளதும் இந்த சிரசாசனம் . தலையை பிரதானமாகக் கொண்டதினால் இதற்கு சாசாசனம் என்று பெயர்
செய்முறை :
சிரசாசனம் செய்வதற்கு முன்பு ஒரு அங்குலம் கனமுள்ள மடித்த துண்டின் மேல் சிரசை வைத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி கொண்டு கால்களை மெல்லத் தூக்கி படத்தில் காட்டியபடி நிறுத்திக் கொண்டு பச்சை மெல்ல வெளியில் விட வேண்டும் .
பிறகு இயற்கையாக மூச்சை வெளியே விடவும் உள்ளுக் குள் இழுக்கவும் வேண்டும் . சிரசாசனத்தைப் புதியதாகப் பழகுபவர்கள் ஆரம்பத்தில் சுவரோமாய் நின்று பழக வேண்டும் . பழக பழக சுவரின் துணையில்லாமலேயே தனியாக பழகலாம்.
சிரசாசனம் பழகும்போது உடல் இடுப்புக்கருகிலோ , கழுத்துக்கருகிலோ , முழங்கால் பகுதியிலோ வளைந்திருக் கக் கூடாது . உடல் ஒரே நேர்க் கோட்டில் இருக்க வேண்டி யது மிகவும் அவசியம்.
ஆரம்பகட்டத்தில் கால்களை மேலே தூக்குவதற்கு துனைக்கு எவரையாவது அருரில் வைத்துக் கொண்டு பழகினால் போகப்போக ஒரே நொடியில் தலையைத் தரையில் ஊன்றி சட்டென்று கால்களை மேலே தூக்கி விட முடியும் .
நேர அளவு :
நிமிடங்கள் இந்த சிரசாசனத்தை உடல் நிலைக்கு ஏற்றபடி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும் . அப்படிச் செய்யும் போது கழுத்தில் வலி ஏற்ப்பட்டால் .உடனே கால்களைப கீழே இறக்கி ஆசனத்தை நிறுத்திவிட வேண்டும்.
பலன்கள் :
இந்த ஆசனத்தினால் முதலில் பயன் பெறுவது மூளையா கும் . நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஹெரண்யாஎன்ற நோய் கட்டுப்படுகிறது . காது கோளாறுகள் மலச் சிக்கல் நீங்குகிறது . மேலும் ஜலதோஷம் , தலைவலி நோய் கள் வருவதில்லை . பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டு கை கால்கள் சரியாக வேலை செய்யாதவர்கள் பிறர் உதவி யோடு சிரசாசனப் பயிற்சியை மேற்கொண்டால் பாரிச வாயு மட்டுப்பட்டு செயலிழந்த கைகால்கள் மீண்டும் இயக்கம் பெறும் இதற்கு பல மாதங்கள் தொடர்ந்து இப்பயிற்சியை செய்து வர வேண்டும் .
பயிற்சியாளர் கவனத்திற்கு :
இப்பயிற்சியை மிகவும் நிதானத்துடன் , ஆரம்பத்தில் அதிகப்பட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கக்கூடாது இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது உணவு உட்கொண்டவுடன் சிரசாசனம் செய்ய கூடாது . மது அருந்திய நிலையிலும் சிரசாசனம் செய்யக் கூடாது . 🙏🙏🙏🙏
Comments
Post a Comment