தனுராசனம்:
தனுராசனம் என்பது வில் போன்ற இருக்கையெனப் பொ ருள்படும் . வில் போன்று தோற்றம் அளிப்பதால் இப்பெயர் .
செய்முறை :
சலபாசனம் செய்து முடிந்ததும் , அதே நிலையில் குப்புறப் படுத்து கொண்டபடியே கால்கள் இரண்டையும் முதுகின் பக்கமாக வளைக்கவும் . இரு கைகளினாலும் வளைத்த கால்களைக் கணுக்காலுக்கருகில் பிடித்துக் கொள்ளவும் . படத்தில் காட்டியவாறு நன்கு கவனித்து சுவாசத்தை வெளியே விட்டுக் கொண்டே முதலில் கால்களைச் சேர்த்த வாறே உயரத் தூக்கவும் . பின்பு தலையையும் கழுத்தையும் முடிந்த வரைக்கும் பின்னால் இழுத்து வளைக்கவும் .
நேர அளவு :
மூன்று முதல் ஐந்து வினாடி வரை நிறுத்தவும் . இவ்வாறு இரண்டு மூன்று முறைகள் செய்யவும் .
பலன்கள் :
வயிற்று உறுப்புகளை வலுப்படுத்துகிறது . தொப்பையை குறைக்கிறது . கூன் முதுகை சரி செய்கிறது . முட்டி வலிகள் குணமடைகின்றன . நழுவிய முதுகுத் தண்டு , ஆஸ்துமா , நீரிழிவு நோய் சரி செய்யப்படுகிறது . வயிறு , இடுப்புப் பகுதி யில் உள்ள கொழுப்பை நீக்குகிறது . மாதவிலக்கில் குறைபாடுள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனுடையது .
பயிற்சியாளர் கவனத்திற்கு :
புதிதாகப் பழகுகிறவர்கள் ஒரு கணுக்காலை மட்டும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு காலை வெறுமனே நீட்டியவாறு இந்த ஆசனத்தைச் செய்யலாம் . இவ்வாறு சில நாட்கள் மாறி மாறிச் செய்து பழகினால் பின்னர் இரு கணுக்கால்களையும் கைகளால் பிடித்துக் கொண்டு இந்த ஆசனத்தை திறம்படச் செய்யலாம் .
Comments
Post a Comment