ஏகபாதஆசனம்

 ஏகபாத ஆசனம் :

ஏக என்றால் ஒன்று பாத என்றால் பாதம் . ஒரு பாதத்தில் நிற்கிற நிலை .
 
செய்முறை : 

நேராக நிற்க வேண்டும் . வலது காலைத் தரையில் நன்றாக ஊன்றி இடது காலைத் தூக்கி வலது தொடையின் மீது வைக்கவும் . இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும் . இப் போது கைகளை உயர்த்தி தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும் . இப்போது மூச்சை உள்ளிழுத்து முன்னால் ஏதாவது ஒரு புள்ளியில் கண்களை கவனமாக வைக்க வேண்டும் . ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும்

 நேர அளவு : 

1 நிமிடம் செய்யலாம் ஒரு முறை போதுமானது . 

பலன்கள் : 

கால் தசைகள்  வலிமை பெறுகின்றன . ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது . மனதில் சமநிலை ஏற்படுத்து கிறது . சிரசாசனத்தின் பயனை அதிகரிக்கிறது. 

பயிற்சியாளர் கவனத்திற்கு : 

இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்யவும் . அதிக பட்சம் இரண்டு முறை . 

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி