திரிகோண ஆசனம்

திரிகோண ஆசனம் : 

                        இந்த ஆசனம் முக்கோண தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது . 
 செய்முறை : 

                       முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும் . பின் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்தி நிற்க வேண்டும் . 

மெல்ல காற்றை உள்ளுக்கிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும் . இப்போது இழுத்த மூச்சை மெல்ல வெளியே விட்டுக் கொண்டே கைகளை நீட்டிய நிலையில் அப்படியே வைத்துக் கொண்டு உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும் . 

உடலை இடது பக்கமாக வளைக்கும்போது முழங்காலை யோ , உடலின் மற்ற பாகங்களையோ வளைக்கக் கூடாது . இடுப்பை மட்டும் வளைக்க வேண்டும்.

நீட்டிய இடது கையின் நுனிவிரலால் இடது பாதத்தைத் தொட வேண்டும் இந்த நிலையிலேயே சில விநாடிகள் இருக்க அந்தச் சமயம் மூச்சுக் காற்றை உள்ளுக்குள் இழுக் கக் கூடாது . அச்சமயம் முகத்தை மேல்பக்கம் திருப்பி வலது கைவிரல் நுனியைப் பார்க்க வேண்டும் . இப்போது நீட்டிய நிலையில் உள்ள வலதுகை வானத்தை நோக்கி நிற்கும் . அண்ணாந்து பார்க்கும்போது முகவாய்க் கட்டை வலது புறத்தை ஒட்டியிருக்க வேண்டும் . 

பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே படிப்படியாக நிதானமாக மெதுவாக மேலே உயர்த்தி நேர் நிலைக்கு வர வேண்டும் . இந்த நிலையில் ஓரிரு விநாடிகள் அப்படியே இருந்து நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும் .

 நேர அளவு : 

                      நான்கு அல்லது ஐந்து வினாடி வரை நிறுத்தவும் . இது போன்று ஐந்து அல்லது பத்து தடவை மாறி மாறி செய்யலாம் . 

பலன்கள் : 

                     முதுகு நரம்புகள் பக்கவாட்டில் வளைக்கப்பட்டு நன்கு புத்துணர்ச்சி பெற்று முதுகு நரம்புகள் கை கால்கள் நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கின்றன . இடுப்பு பிடிப்பு வலி நீங்குகிறது . முதுகுப் பக்கத்தில் நல்ல இரத்தம் ஓட்டம் ஏற்பட்டு அப்பகுதியில் கொழுப்பு சக்தி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்கிறது .

 பயிற்சியாளர் கவனத்திற்கு : 

                            இப்பயிற்சியை தொடங்கும் போது சிலருக்கு கை விரல் , கால் விரலைத் தொடவே தொடாது . விடா முயற்சியோடு பயிற்சியை செய்து வந்தால் சில நாட்களில் இடுப்பு 
 வளைந்து பாத விரல்களை கை விரல் தொடும் அளவுக்கு வந்து விடும் .
 இதனை நிதானமாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும் . இடுப்பை வளைத்து காலைத் தொடும் போது சிலருக்கு இடுப்பு முன்பக்கமாகத் திரும்பக்கூடும் . 
அப்படி திரும்பாமல் கவனமாகவும் நிதானமாகவும் இடுப்பை பக்கவாட்டில் மட்டுமே வளைக்க வேண்டும் . அச்சமயத்தில் முழங்கால்களைத் தளர்த்தியாகவோ வளைத் தோ வைத்திருக்கக் கூடாது .

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி