தமிழ் நீதி கதைகள்



ஒரு மன்னன் ஒரு நாள் அவன் நாட்டிலிருந்த காட்டில் வாழ்ந்து கொண்டு இருந்த ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.

செடி நாட்டுக்கு கொண்டிருந்த ஞானி, மன்னன் வருவதைப் பார்த்தவுடன் தன் குடிலுக்குள் சென்று விட்டார் மன்னன் திகைத்தார்.

”ஞானியே, நான் வந்திருக்கிறேன், வெளியே வந்து அருள் தாருங்கள்”அவர் வரவில்லை.

நான் இந்த நாட்டின் மன்னன் வந்து இருக்கிறேன், வெளியே வாருங்கள்”அவர் வரவில்லை.

மன்னன் பொறுமை இழந்தான்.“நான் இந்த நாட்டு மன்னன் வந்து இருக்கிறேன், உங்கள் அருளுக்காக” 
உள்ளிருந்தே ஞானி சொன்னார், ”நான் செத்த பின் வா!”மன்னன் குழம்பினான் .

அமைச்சரைக் கேள்விக் குறியுடன் பார்த்தான். அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தனர். அவர் சொன்னார் ”அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் ‘’நான்’’ என்ற ஆணவத்தை; அதை துறந்து வரச் சொல்கிறார் ”என்று.

நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத் துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை! 

"நான்" என்னும் அகங்காரம் உள்ளவரை எவராலும் வாழ்வில் வெற்றி அடைய முடியாது.. 

"EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது, கண்ணில் விழுந்த தூசு போன்றது.
அந்தத் தூசியை சுத்தம் செய்யாமல் உங்களால் எதையும் காண இயலாது. எனவே "EGO" (நான் என்னும் அகங்காரம்) என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு உலகத்தைப் பாருங்கள்.

நீதி: 

எந்த மனதில் 'அகந்தை' இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும்.

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி