மயூராசனம்

மயூராசனம் என்றால் மயில் இருக்கை என்று பெயர் மலச்சிக்கலைப் போக்குவரத்து உன்னதமான ஆசனம்

செய்முறை:

                         விரிப்பின் மேல் மண்டியிட்டு உட்காரவும் முன்னால் குனிந்து இரு உள்ளங்கைகளையும் முழங்கால்களின் அருகில் கைவிரல்கள் கால் பக்கம் பார்க்கும்படியாக விரிப்பில் ஊற்றவும்
முழங்கைய்களைத் தொப்புளில் அமர்த்தி மண்டியிட்ட கால்களை பின் பக்கம் நீட்டவும்
பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கால்களை விரைப்பாக முழங்கால் வளையாமல் உயரத்துக்கும் படத்தில் காட்டியபடி உடல் முழுவதுமாக முழங்கைகளின் பலத்தினால் தாங்கி சம நிலையில் நிறுத்தவும் ஆசன வாயில் மூச்சை சிறிது அடக்கி கொள்ளலாம்

நேர அளவு : 
                          பத்து முதல் இருபது வினாடி வரையில் நிறுத்தலாம் . ஒரு முறை செய்தால் போதுமானது . 

பலன்கள் : 
                        இப்பயிற்சியினால் வயிற்றின் உள்ளுருப்புகள் நன்றாக அமுக்கப்படுவதால் ஆங்காங்குத் தேங்கி நிற்கும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்பட்டுக் குடலானது நன்கு சுத்தப் படுத்தப்படுகிறது . தொந்தியைக் கரைப்பதுடன் மூலம் நீரிழிவு , மஞ்சட் காமாலை , மலச்சிக்கல் போன்ற கொடிய வியாதிகளையும் போக்கடிக்கும் . நல்ல ஜீரண சக்தியைக் கொடுத்து , ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு . 

பயிற்சியாளர் கவனத்திற்கு : 
                                                 
                           ஆசனம் செய்யும் போது எப்போதும் அவசரப்படக் கூடாது . நிதானமாகச் செய்ய வேண்டும் . தலையை முன் பக்கமாக நீட்டி முழங்கால்களை தூக்கும்போது மூக்கு தரை யில் மோதி காயம் ஏற்படும் . அதுவும் இல்லாமல் வாய் , உதடு , பல் ஆகியவைகளும் அடிபடும் . உடல் பளுவை கை களில் தாங்கும் போது நரம்புகள் சுளுக்கிக் கொள்ளும் மூட்டுகளில் வலி ஏற்படும் . ஆரம்பத்தில் இதுபோன்று ஏற் பட்டாலும் பழகப் பழகச் சரியாகிவிடும் . முக்கியமாக வயிற் றில் அப்ரேஷன் செய்து கொண்டவர்களும் ஹெரனியா எனும் குடலிறக்க தொந்தரவு உள்ளவர்களும் இந்த ஆசனத் தை செய்யக் கூடாது . பெண்கள் இப்பயிற்சியை செய்து வரும் போது கர்ப்பம் தரித்தது என்று தெரிந்து விட்டால் உடனடியாக இப்பயிற்சியை நிறுத்திவிட வேண்டும் . இது  போன்ற சந்தர்பங்களில் தவிர்த்து இப்பயிற்சியை மேற்க்கொண்டால் உடல் வளம் பெற்று வளமுடன் வாழலாம் . 

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி