இந்த ஆசனப்பெயரைப் பார்க்கும் போதே அதன் உயர்வு தெற்றெனத் தெரிகிறது . சர்வாங்கம் , சர்வ அங்கம் , அதாவது உடலின் சகல உறுப்புகளுக்கும் சிறந்த சக்தியைக் கொடுக்கும் உன்னதமான இருக்கை நிலை உயர்ந்த நிலைக் குத் தகுந்த உன்னதப் பெயர் சர்வ அங்கங்களுக்கும் அபூர்வ ஆரோக்கிய சக்தியை அளிப்பதால் சர்வாங்கா சளம் என்று பெயர் . இல்லற வாழ்க்கை நடத்தும் இளைஞர்களும் , முதியோர் களும் , சிறுவர்களும் , ஆண் பெண் வேற்றுமையின்றி ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் மற்ற ஆசனங் களை விட மிக முக்கியமாக ஞாபகம் வைத்துப் பயின்று வர வேண்டியதுஇச்சர்வாங்காசனமே .

செய்முறை :
சம தரையில் விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும் , கைகளை விரிப்பின் மீது அமர்த்தி உடலோடு சேர்த்து வைக்கவும்
கால்களை இரண்டையும் சேர்த்துக் கொண்டு முழங்கால் உயர்த்தித் தொடைகளை மடக்கி வயிற்றோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும் .
பின்பு பாதங்களை மேல் நோக்கும் படியாக வைத்துக் கொண்டு முதுகை மெதுவாகக் கிளப்ப வேண்டும் . கைகளை இடுப்பின் இரு பக்கங்களிலும் ஆதாரமாகக் கொடுத்து முதுகை மேலே தூக்கவும் .
தலையும் கழுத்தும் இடைவெளி இல்லாமல் விரிப்பின் மேல் நன்றாகப் பதியும்படி செய்து முதுகு இடுப்பு , கால்கள் வளைவு இல்லாமல் நேர்கோடு போல் உயர்த்திப் பாதங் களை மேல் நோக்கும் படியாக நிறுத்த வேண்டும் .
முக்கியமாக மோவாய்க் கட்டை நெஞ்சை அமிழ்த்திய படியே இருக்க வேண்டும் . இந்த ஆசனத்தின் பூரண பலன் இந்த சின் லாக்கில் தான் அமைந்திருக்கிறது .
இப்பயிற்சி செய்யும் போது மூச்சை அடக்க வேண்டிய தில்லை சாதாரணமாக மூச்சை உள்ளிழுத்து நிதானமாக வெளிவிடவும் .

நேர அளவு :
ஆரம்ப சாதகர்கள் ஐந்து வினாடி முதல் ஒரு நிமிடம் வரை நிறுத்தலாம் . இம்மாதிரி மூன்று முதல் ஐந்து முறை செய்ய வேண்டும் . நன்றாகப் பழகிய பின்பு ஒரே முறையில் ஐந்து நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை நிறுத்தலாம்
பலன்கள் :
இந்த ஆசனம் உடலில் தொல்லை கொடுக்கும் பிணிகளான மலச்சிக்கல் , வயிற்றுக் கடுப்பு , வயிற்றுப் போக்கு , குடல் வியாதிகள் , தோல் வியாதிகள் கீல் வாதம் . யானைக் கால் , விரை வீக்கம் , டையபெடிஸ் , அப்பெண்டிஸைடின் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது . வாழ்வையே நரகவேதனைக்குட்படுத்தும் கொடிய வியாதிகளான ஆஸ்துமா , காசம் , மேகம் , குஷ்டம் அகன்றுவிடும் . பெண் களுக்கேற்படும் சூதகக் கோளாறுகள் , மலட்டுத்தன்மை முதலியவை நீங்கிப் புத்திர பாக்கியம் உண்டாகும் .
பயிற்சியாளர் கவனத்திற்கு :
ஆசனம் பயின்று கொண்டிருக்கும் போது உமிழ் நீர் , தும்மல் , இருமல் வந்தால் , ஆசனத்தைக் கலைத்து விட்டுப் பின்பு செய்ய வேண்டும் . ஆசனத்தில் நிற்கும் காலம் முடிந்ததும் , திடீரெனக் கைகளை அகற்றிக் கால்களைப் பூமி யின் அடி படும்படி விட்டுவிடக் கூடாது .
மேலே நிறுத்திய கால்களை மெதுவாக இறக்கி , முழங்கால்களை மடித்து முதுகைத் தாழ்த்தி , முழங்கால்களை வயிற்றைத் தொடும் படி செய்யவும் பினபு கைகளை அகற்றிக் கால்களை விரிப் பின் மேல் நீட்டிக் களைப்பாறவும் .
Comments
Post a Comment