விபரீதகரணி ஆசனம்


விபரீதகரணி ஆசனம் :

விபரீதகரணி ஆசனத்தில் கால் மட்டும் செங்குத்தாகவும் உடல் பகுதி சாய்வாகவும் வைத்து பயிற்சியை மேற் கொள் கிறோம் . சர்வாங்க ஆசனத்தில் உடல் முழுவதும் தலைகீழ் நிலையில் நிறுத்தப்பட்டு பயிற்சியை மேற் கொள்கிறோம் . 
செய்முறை : 

                          முதவில் விரிப்பின் மீது சர்வாங்காசனப் பயிற்சியைப் போன்று மல்லாந்து படுத்துக் கொண்டு , மூச்சை உள்ளுக்கு இழுத்து அடக்கியபடி நீட்டிய கால்களை ஒன்றாகச் சேர்த்து மேலே தூக்க வேண்டும் . 

கால்களை மேலே தூக்கும்போது அச்சமயம் இரண்டு
கைகளாலும் இடுப்புக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு தாங்கிக் கொண்டு மேலே கால்களை செங்குத்தாக நிறுத்த வேண்டும் . அப்போது உடலின் பாரம் முழுவதும் பின் கழுத்து . நெஞ்சின் மேல் பின்புறப் பகுதி ஆகியவற்றில் மட்டும் தாங்கியிருக்க வேண்டும் .

பின்பு தோள் , வயிறு , நெஞ்சு ஆகியப் பகுதிகளை ஒரே நேர்கோட்டில் அதாவது இடுப்பிலிருந்து சுமார் 45 அளவு படத்திலுள்ளது போன்று சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும் . அப்போது நன்கு மூச்சை வெளியே விட்டும் உள்ளுக்குள் இழுத்தும் விட்டு விட்டு இப்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும். 

நேர அளவு : 

                       இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும் . இதே மாதிரி இரண்டு மூன்று முறை செய்யவும். 

பலன்கள் : 

                    மார்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது . சளி , இருமல் , காச நோய் , ஆஸ்துமா ஆகிய நோய்கள் தலை காட்டாது . அத்துடன் நரம்பு தளர்ச்சி , இரத்த அழுத்தம் , சிறுநீரகக் கோளாறுகள் வராது . கழுத்துப் பகுதியில் நல்ல இரத்தம் ஓட்டம் ஏற்படுவதால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்து உடலை ஆரோக் கியமாக வைத்துக் கொள்ளும் . கை கால்களுக்கு நன்கு இரத்த ஓட்டம் ஏற்பட்டு சுறுசுறுப்புடன் இயங்கும் . 

பயிற்சியாளர் கவனத்திற்கு : 

                               ஆண் பெண் சிறுவர் எல்லோருமே இந்தப் பயிற்சியை மேற் கொள்ளலாம் . ஆனால் கருவுற்ற பெண்கள் இந்தப் பயிற்சியை மேற் கொள்ளக் கூடாது . ஆசனம் பயிலும் போது ஆரம்பத்தில் இருமல் , சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம் . 

தொடர்ந்து இப்பயிற்சியை மேற்கொண்டால் தாமாகவே இந்தத் தொல்லைகள் அகன்று விடும் . இருமல் அதிகமாக ஏற்பட்டால் சிறிது பசும்பாலை அருந்தி விட்டு இப்பயிற்சியை மேற் கொள்ளலாம் . ஆரம்ப த்தில் இடுப்பைத் தாங்கி பிடிக்க முடியாமல் போனால் இடுப்புப் பகுதிக்கு ஓரிரு தலையணையைக் கொடுத்து தாங்கிக் கொள்ளலாம் . 

அப்போது கைகள் குப்புற கவிழ்ந்து கிடக்கும்படி விட வேண்டும் . இது போன்று மேற்கொண்டு பின்பு தலையணையை எடுத்து விட்டு முறையோடு விபரீத கரணி ஆசனத்தைப் பழக வேண்டும் . 

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி