மச்சாசனம்

மச்சாசனம் :

மச்சாசனம் என்பது மீன் உருவமன்று , செயல் வடிவில் மீன் போன்றதாகும் . தண்ணீரில் உள்ள மீன்கள் நம் உடலி லுள்ள சிரங்கு போன்ற புண்களை கொத்தித் தின்னும் அதனால் புண்ணிலுள்ள கிருமிகள் ஒழிந்து விடுகிறது . அது போன்று இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரலிலுள்ள விஷக் கிருமிகள் அழிக்கப்பட்டு நமக்கு ஆரோக்கியத்தை அளிப் பதால் இதற்கு மச்சாசனம் என்று கூறப்படுகிறது . 
செய்முறை : 

                         யோகாசனப் பயிற்சிக்காகப் போடப்பட்ட விரிப்பின் மீது அமர்ந்து பத்மாசனம் போட்டுக் கொள்ள வேண்டும். 

முதலில் நிமிர்ந்து உட்கார்ந்து வலது காலை மடித்து இடது தொடையின் மீதும் , இடது காலை மடித்து வலது தொடை யின் மீதும் போட்டு கொண்டு கால்களைப் பிரிக்காமல் பின்பக்கமாகச் சாய்ந்து இரு கைகளையும் பின்பக்கமாக உயர்த்தியபடி வளைத்து தரையில் வேண்டும் . ஊ ன்றும்படி செய்யவேண்டும். 

பிறகு மெதுவாக கழுத்தைப் பின்பக்கமாக வளைத்து தலை யை தரையில் படும்படி வைத்து இடுப்பையும் மார்பையும் மேல் நோக்கி வில்லைப் போன்று வளைக்க வேண்டும் .

 இப்போது பத்மாசனம் போட்டபடி இருந்த கால் தொடை கள் இரண்டும் தரையில் படும்படி இருக்க வேண்டும் . அப்போது கைகளை முன்னால் கொண்டு வந்து இரு கை விரல்களால் இரு பெருவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் .

 இச்சமயத்தில் மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்துக் கொண்டு மெதுவாக வெளியே விட வேண்டும் . இப்படி சுமார் ஒரு நிமிடம் வரை மூச்சை இழுத்தும் விட்டும் மச்சாசனம் பயில வேண்டும் .

 பலன்கள் : 

                       இப்பயிற்சியில் நரம்புகள் செயல்பாடும் . தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்கிறது . நுரையீரல் விரிவடைந்து தாராளமாக மூச்சை உள்ளுக்கு இழுக்கப்படுகிறது . காசநோய் காசம் , இருமல் போன்ற தொந்தரவுகளும் வராது . 

முதுகெலும்பும் , இடுப்பும் வளைக்கப்படுவதால் நரம்பு மண்டலம் வலிமை பெற்று உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் . முக்கியமாக நுரையீரல் அதிக அளவில் காற்றை உள்ளுக்கு இழுப்பதால் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு இரத்தம் தூய்மை அடைகிறது .

 பயிற்சியாளர் கவனத்திற்கு : 

                                மச்சாசனம் செய்பவர்கள் இடை இடையே விட்டுவிட்டு செய்யக் கூடாது . தினசரி செய்து வந்தால்தான் இதன் பலனை உணர முடியும் . மச்சாசனப் பயிற்சியை அதிக நேரம் செய்யக் கூடாது . இரண்டு நிமிடங்கள் அல்லது ஐந்து நிமிடங்கள் செய்யலாம் . இப்பயிற்சியின் போது கால்கள் தரையில் படும்படியாகப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் . வெறும் வயிற்றோடுதான் இப்பயிற்சியை செய்ய வேண்டும் . 

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி