சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம் - கட்டிகளை போக்கும் !
- Get link
- X
- Other Apps
சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம் - கட்டிகளை போக்கும் !
குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது .
வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை , மாலை கொடுக்க சளி , இருமல் குணமாகும் .
அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும் . வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு வேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும் .
நுரையீரல் நோய்கள் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் , ஜன்னிக்கு , வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி , கோரோசனை , சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும் . சளி , இருமல் , மாந்தம் , இழுப்பும் குணமாகும் .
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும் , இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும் . வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும் , விதைப்பையில் ஏற்படும் வலி , வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும் .
மலச்சிக்கல் நோய் குணமாக சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம் .
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசனவாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும் , கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிற்று உப்புசம் , மந்தம் , சன்னி , சீதளரோகம் , தலைவலி , நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும் .
கட்டிகள் குணமாகும் வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும் . தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும் .
வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய்தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும் . இதை இரவில் செய்தால் நல்லது .
சுக்கு , மிளகு , திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும் . குரல் வளம் கிடைக்கும் வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது.
வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும் , தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும் . வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும் .
எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள் . வாயு தொல்லையை நீக்கி , உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு , கால்சியம் , பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன .
வைட்டமின்களுடன் , நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி , உடல் இறுக்கம் , குடல் புண்களை குணப்படுத்துகிறது .
வெற்றிலை ரசம் செய்முறை :
வெற்றிலை , மிளகுப்பொடி , திப்பிலி , பூண்டு , பெருங்காயப்பொடி , உப்பு . ஒரு பாத்திரத்தில்பெருங்காயப்பொடி , உப்பு . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , நசுக்கிய பூண்டு , திப்பிலி , பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும் . அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும் . வெற்றிலை நன்கு வெந்ததும் , ரசத்தை வடிகட்டி அருந்தலாம் .
டான்சில்ஸ் , வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் .
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment