உடல் நலத்தை பாதுகாக்கும் பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்
- Get link
- X
- Other Apps
உடல் நலத்தை பாதுகாக்கும் பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள் :-
பூசணிக்காயில் உடல்நல பயன்களை பற்றி கேள்விப்பட்டால் வாயடைத்து போவார்கள். பலருக்கு அதனால் கிடைக்கும் உடல்நல பயன்களை பற்றி தெரிவதில்லை.
அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்டவர்கள் தங்கள் பாரம்பரிய உணவு பழக்கத்தில் பூசணிக்காயையும் சேர்த்திருந்தார்கள். பூசணிக்காயில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மலங்கழித்தல் சுலபமாக நடக்கும். ஒரு கப் பூசணிக்காயில் 3 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.
தேவையான ஆற்றல்
இதில் வளமையான அளவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளதால், உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து உதவிடும்.
உடல் எடையை குறைக்கும்
பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உங்கள் உடல் எடையை குறைக்கவும் இது உதவும். அதிக உடல் எடையை கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
பீட்டா கரோட்டின் நிறைந்தது
பூசணியில் உள்ள ஒளிமிக்க ஆரஞ்சு நிறம், அதில் இருக்கும் அதிகளவிலான பீட்டா கரோட்டின் அடக்கப் பொருளை வெளிக்காட்டும். பீட்டா கரோட்டின் என்பது வைட்டமின் ஏ-யின் முன்னோடி. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கும், கண் பார்வைக்கும் இது தேவைப்படுகிறது.
சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு
சரும புண்களை ஆற்ற, சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, தழும்புகளை மறைய செய்யவும் இது உதவுகிறது.
சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்
உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு எலெக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது பூசணிக்காய். வாழைப்பழத்தில் இருப்பதை விட அதில் அதிகளவிலான பொட்டாசியம் இதில் உள்ளது. (பூசணிக்காயில் 564 மி.கி. vs வாழைப்பழத்தில் 422 மி.கி)
சளி மற்றும் காய்ச்சல்
சளி மற்றும் காய்ச்சலை போக்கவும் இது பெரிதும் உதவும். ஒரு கப் பூசணிக்காயில் 11 மி.கி. வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் சி-யில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, பீட்டா கரோட்டின் உட்கொள்பவர்களுக்கு தொற்றின் இடர்பாடு குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.
• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.
• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது.
• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.
• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம்.
• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.
• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை – நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.
• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது.
• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.
• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment