நரிப்பயறு இது ஒரு மானாவரி பயிர். ஆனாலும் சத்துக்கள் மிகுந்தது.



நரிப்பயறு



இது ஒரு மானாவரி பயிர். ஆனாலும் சத்துக்கள் மிகுந்தது.


இதில் நார்ச்சத்து,கால்சியம்,புரதம்,பாஸ்பரஸ், மக்னீசியம்,இரும்புசத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்திருக்கிறது.


நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கும் இந்த நரிப்பயிரை முளைகட்டி உண்பது சிறப்பு. 


பார்க்க பாசிப்பறு போல் இருந்தாலும் உருவத்தில் அதைவிட சிறியது. இதனை அவித்து தேங்காய் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் சத்தும் சுவையும் அதிகம்.


இதை வறுத்து உடைத்து தேங்காய்பால்,கற்கண்டு சேர்த்து பால்கஞ்சியாக குடித்தால் நெஞ்சில் உள்ள சளியை போக்கி கபத்தை குறைக்கும்.


நரிப்பயிரை வறுத்து பொடித்து தேங்காய்,வெல்லம்,ஏலக்காய் சேர்த்து உருண்டை செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சுவையை தரும்.


முளைகட்டி உண்பதால் சர்க்கரை,நீரழிவு நோய்களை கட்டுபடுத்தும் ஆற்றல் நரிப்பயிறுக்கு உண்டு.


ஒரே ஆறுதல் நரிப்பயிரை இன்னும் ஒட்டு ரகமாக மாற்றாமல் விட்டு வைத்திருக்கிறார்கள். 

நரிப்பயிர் என்றாலே அது நாட்டுரகம்தான்.

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி