மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் #பசுந்தீவனவிதை_வழங்கல்..!!
- Get link
- X
- Other Apps
தமிழக விவசாயிகளுக்கான
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ்
#பசுந்தீவனவிதை_வழங்கல்..!!
●மாநில அரசின் நிதியுதவியுடன் கால்நடை விவசாயிகள் பசுந்தீவனப் பயிர், அடர் தீவனம் உற்பத்தி செய்து பயன் பெறுமாறு கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.
●தற்போது மழை காலம் என்பதால் கால்நடைகளுக்கான பசுந்தீவனப் பயிர் கிடைப்பதில் சிரமம் இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு கடந்த சில வருடங்களாக மானிய விலையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறது.
●அந்த வகையில் இம்முறை கரூர் மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கரில் பசுந்தீவன சாகுபடிக்கு இலவசமாக விதைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கால்நடைத் துறை அறிவித்துள்ளது.
●அதிகரித்து வரும் பால், இறைச்சி தேவையை கருத்தில் கொண்டு, கால்நடை வளர்ப்பு, பசுந்தீவனப் பயிர் வளர்ப்பு மற்றும் அடர் தீவன வளர்ப்பை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப் படுத்தி வருகிறது.
● ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டங்களையும், மானியங்களையும் அறிவித்து வருகிறது. தற்போது கரூர் மாவட்டத்தில், மானாவாரியில், 2,000 ஏக்கர் பரப்பளவில் சோளம் மற்றும் தட்டைப்பயறு வகைகள் சாகுபடி செய்ய முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
●பசுந்திவனத்திற்கேற்ற கோ – 4, கோ – 5 புற்கள், அமெரிக்கன் டால்ஸ், டெஸ்மாந்தர் ஆகிய புல் வகைகளை வளர்ப்பதற்கும் மானியம் வழங்க படுகிறது.
【மானியம் பெற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:】
◆கால்நடைகளை வளர்க்கும் சிறு குறு விவசாயிகள், அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் மானியம் பெற தகுதியானவர்கள் ஆவர்.
◆பயனாளிகள் 0.25 ஏக்கர் முதல் 1 ஏக்கர் நிலத்திற்கு தேவையான விதைகளை பெற்றுக் கொள்ளலாம். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
◆பசுந்திவனம் அறுவடை செய்திட எதுவாக புல் அறுவடை செய்யும் கருவி, 75 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
◆மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
◆பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment