ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், யானைகளின் எண்ணிக்கை, 1,200 என உயர்ந்துள்ளது
- Get link
- X
- Other Apps
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், யானைகளின் எண்ணிக்கை, 1,200 என உயர்ந்துள்ளது.
![]() |
| Add caption |
1,455 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தை, யானை, மான், குரங்கு உட்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. மேலும், அதிகளவில் யானைகளும் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், சத்தியமங்கலம், ஆசனூர் உள்பட, பத்து வனச்சரகங்கள் உள்ளன.
இதில், அடர்ந்த புலிகள் காப்பக பகுதியான ஆசனூர், தலமலை, தெங்குமரஹடா போன்ற பகுதிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மலைப்பகுதி காடுகள் பசுமை படர்ந்து, குட்டைகளில் நீர் நிரம்பி கண்ணுக்கு இனிமையாக காணப்படுகிறது. இதனால், யானைகள் தண்ணீர், உணவு தேடி கிராமத்துக்குள் புகும் நிலை குறைந்துள்ளது.
'யானைகளால் காடுகள் காக்கப்படுவதாகவும், யானைகள் மனிதர்களுடன் இணைந்து வாழ பழகி கொள்வதாலும், பாதுகாக்கப்பட வேண்டும்' என, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால், சத்தியமங்கலம் வனப்பகுதியில் வீடியோ, ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை வனத்துறையினர் மேற்கொண்டனர்.
யானைகள் தினம் குறித்து, வனத்துறையினர் கூறியதாவது: சத்தியமங்கலம் வனப்பகுதியில், யானைகளின் எண்ணிக்கை அதிகம். அவற்றுக்கான வாழ்க்கை சூழல் இங்கு உள்ளது. இருப்பினும், குடற்புழு நோய் தாக்கம், தோட்டங்களுக்குள் யானை புகுந்துவிடாமல் தடுக்க வைக்கப்படும் மின்சார வேலிகளாலும் யானைகள் இறக்கின்றன. கடந்தாண்டு, ஏழு யானைகள் இறந்துள்ளன. முதுமலை எல்லையில் வாழும் யானைகள், ஜனவரி முதல் இனப்பெருக்கத்துக்காக, சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வந்து, ஐந்து மாதங்களுக்கு மேல் முகாமிட்டு, மீண்டும் முதுமலை வனப்பகுதிக்குள் செல்லும். இதனால், யானைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டபின், வனத்தின் செழுமை, பாதுகாப்பு, விலங்குகள் வாழ்வதற்கான சூழல் போன்றவை அதிகரித்துள்ளதால், யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில், 1,200 யானைகள் இருப்பது தெரியவந்தது.
இவை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. யானைகள் நோயால் பாதிக்கப்படும்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியிலேயே, அவற்றுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இந்தியாவில், இங்கு மட்டுமே யானைகளுக்கான ஆம்புலன்ஸ் செயல்படுகிறது.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment