கடத்தல்காரர்கள் தங்கம் கடத்துவதற்கு புதிய முறையைக் கையாளுவதை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். துபாயிலிருந்து சர்வதேச விமானமாக வரும் விமானங்களில் தங்கத்தை மறைத்து வைத்து அதன் பிறகு அதே விமானம் இந்தியாவில் குவஹாத்தி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு இடையே இயங்கும் விமானமாகப் பயணிக்கும் போது, அத்தகைய விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மூலமாக தங்கம் கடத்துவது, அதன் பின்னர் அதே விமானம் குவஹாத்தியில் இருந்து சென்னை மார்க்கத்தில் இயங்கும்போது அதை அங்கிருந்து பெற்றுக் கொள்வது என்ற விதத்தில் தங்கம் கடத்தப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இண்டிகோ விமானம் 6E 66 விமானத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த விமானத்தில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின்போது நீள் சதுர வடிவிலான, கனமான துண்டுகள், கருப்பு டேப் மூலம் ஒட்டப்பட்டு நூலால் கட்டப்பட்டு, உலோகத் துண்டுடன் இணைக்கப்பட்டு, விமான இருக்கை ஒன்றில், துளையுள்ள குழாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வெட்டித் திறந்து பார்த்தபோது 10 தோலா எட...